உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்கி வாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு சோடி கொக்கி வாட்கள்.

கொக்கி வாள், இரட்டை கொக்கிகள், ஃபூ டாவோ, ஹூ தொ கவு (புலித் தலைக் கொக்கி) அல்லது ஷூவாங் கோவ் (எளிய சீனம்: ; மரபுவழிச் சீனம்: 鈎 or 鉤பின்யின்: Gou) என்பது ஒரு சீன ஆயுதம் ஆகும். இது பாரம்பரியமாக சீன வடக்குபாணி தற்காப்புக் கலை மற்றும் உஷூ சண்டைக் கலையுடன் தொடர்புடையது, ஆனால் இப்போது பெரும்பாலும் தென் பாணிக் கலையிலும் இது பயன்படுத்தப் படுகிறது.

பின்னணி

[தொகு]

கொக்கி வாட்கள் குறித்த நம்பகமான தகவல்கள் அரிதாகவே உள்ளன. [சான்று தேவை] இது சில சமயம் பண்டைய ஆயுதம் என்று கிறிப்பிடப்படுகிறது. இது சொங் வம்ச காலத்திலிருந்து உள்ளதாகவும் அல்லது அதற்கும் முந்தைய போரிடும் நாடுகள் காலத்தைச் சேர்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இது குறித்த மிகப் பழமையான எடுத்துக்காட்டுகளும் கலைச் சித்திரங்களும் சிங் காலத்திற்கு பிந்தையதாகவே உள்ளன. அவற்றைக் கொண்டு பார்க்கையில் இவை உண்மையில் அண்மைய வடிவமைப்பைச் சேர்ந்ததாகவே கருத இடமுண்டு. இது பொதுமக்கள் பயன்படுத்திய ஆயுதமாக, சீன ஆயுதங்கள் பற்றிய உத்தியோகபூர்வ பட்டியல்களில் எதிலும் காணப்படவில்லை. இதை பயன்படுத்த தேவையான பயிற்சி போன்றவையானது, இந்த ஆயுதம் மிக அரிதாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை வலுவாக தெரிவிக்கின்றன.

பண்புகள்

[தொகு]

"புலி கொக்கி வாள் " அல்லது கியான் கன் ரி ய்யூ டாவோ (அதாவது "சொர்கம் மற்றும் புவி, கதிரவன் மற்றும் நிலவு வாள்" [1] ) என்றும் அழைக்கப்படும் இந்த ஆயுதங்கள், ஜியான் போன்ற கூர்மையான வாளாக இருக்கும், சிலசமயம் இது தடிமனானதாகவோ அல்லது சில சமயம் இதன் முனையில் உள்ள கொக்கியானது ( ஆட்டு இடையரின் வளை கோலை ஒத்த) கூர்மையற்றதாக இருக்கும். இதைப் பயன்படுத்தும் வீரர்களில் பெரும்பாலானவர்கள் இதை பட்டாம்பூச்சி வாள் பாணியில் இரட்டை வாள்களையே பயன்படுத்துகின்றனர். இந்த வாள் முனையில் உள்ள கொக்கியானது எதிராளியின் ஆயுதத்தைக் கைப்பற்றவோ அல்லது எதிராளியின் காலை இழுந்து தள்ளிவிடவோ பயன்படுத்தப்படுகிறது.

கொக்கி வாளானது ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது:

  • வாளின் பின்பகுதியானது சாதாரண வாளாக பயன்படுகிறது.
  • வாள் முனையில் உள்ள கொக்கியானது எதிரிகளின் ஆயுதங்களைக் கைப்பற்றி நிராயுதபாணியாக்க பயன்படுத்தப்படுகிறது.
  • வாளின் கைப்பிடி முனையானது கூர்மையானதாக உள்ளது.
  • கைப்பிடியைப் பிடித்துள்ள கையை பாதுகாக்கும் வகையில் பிறைவடிவ முன் வளைவு உள்ளது. இந்த வளைவின் வெளிப்பகுதியானது வெட்ட பயன்படும் ஆயுதமாக கூர்மையானதாக இருக்கும்.
  • இரட்டையாக கொக்கிவாளைப் பயன்படுத்துபவர்கள், ஒரு கொக்கி வாளின் முனையில் இன்னொரு கொக்கிவாளை மாட்டி சுழற்ற இயலும். இதனால் வாளின் முனையில் ஊசலாடும் இன்னொரு வாளையும் சேர்ந்து, வாளை கிட்டத்தட்ட ஆறு அடி நீண்ட வாளாக மாற்ற இயலும்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Chinese Martial Art Weapons - Ken To Fude No Ryu Kenshu Kai Karate - Hanshi Solly Said". Kenfuderyu.co.za. பார்க்கப்பட்ட நாள் 2013-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கி_வாள்&oldid=3582737" இலிருந்து மீள்விக்கப்பட்டது